1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2023 (14:21 IST)

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

kkssr
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாயார் காலமானதை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாயார்  அமராவதி அம்மாள் இன்று காலமானார். அவருக்கு வயது 94 . வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் மறைந்த அமராவதி அம்மாள் அவரது உடலுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  அன்பின் உருவான அன்னையை இழந்து தவிக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று  கூறியுள்ளார். 
 
 
Edited by Mahendran