கட்சி நிதி ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும்தான் போனது!.. ஆவேசமாக பேசிய விஜய்...
இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய் வீராணம் திட்டத்திற்கு கலைஞரின் மருமகன் 2.50 சதவீதம் கமிஷன் கேட்டார் என சர்காரியா அறிக்கை சொல்கிறது. திமுகவுக்கு ஒரு பழக்கம் உண்டு.. ஆதாரத்தை பக்கத்தில், வைத்து கொண்டு ஆதாரத்தை தேடுவார்கள்.. நான் கட்சி நிதி என்று சொன்னேன்.. ஆதாரம் கேட்டார்க..ள் ஆதாரம் அவர்கள் பக்கத்தில்தான் இருக்கிறது..
கண்ணதாசன் திமுகவை பற்றி சுருக்கமாக ஒன்று சொன்னார்.. பேசிப் பழகிய பொய்.. வாங்கி பழகிய கை.. போட்டு பழகிய பை என்று கூறினார். அதுதான் திமுக.. அதைத்தான் இப்போது நானும் சொல்ல விரும்புகிறேன். நாங்கள் மிசாவை பார்த்தோம்.. என திமுக மார்தட்டிக்கொள்கிரது.. உண்மையில் அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியும்..
ஒரு உறுப்பினர் எலும்பை உடைப்பேன் என்கிறார்.. இன்னொருவர் திமுகவுக்கு ஓட்டுப்போடாத மக்களுக்கு நல்ல சாவே வராது என மேடையில் பேசுகிறார்.. இப்படி பேசிப் பேசித்தான் சட்டசபையில் எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? மக்களை பார்த்து எப்படி இப்படி பேச முடிகிறது? இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
நான் எனது அருகில் மூன்று ஃபைல்கள் இருப்பதாக கூறினேன்.. அதில் சில சேம்பிள் மட்டும்தான் சொல்லியிருக்கிறேன்.. இன்னும் எல்லா ஃபைலையும் நான் திறந்தால் என்னென்ன பூதம் வருமோ.. திமுக எதை செய்தாலும் குடும்பத்தோடு சேர்ந்துதான் செய்வாங்க போல... ஊழல் செய்தவர்கள்தான் ஆதாரம் கேட்பார்கள்.. ஊழல் செய்யாதவார்கள் அதை கண்டுகொள்ளமாட்டார்கள்.. ஊழலை மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்..
இந்த ஆதாரம் போதுமா? திமுக இருக்கிற இடத்தில்தான் தப்பு நடக்கும்.. தப்பு நடக்கிற இடத்தில்தான் திமுக இருக்கும் என ஆவேசமாக பேசினார். முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசினார். விஜய் திமுகவை பற்றி பேச துவங்கியதுமே உதயநிதி உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.