1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minster vijay talk in karur

பணமா? ஜனமா? என்றால் எனக்கு ஜனமே முக்கியம்!. கரூரில் விஜய் ஆவேசம்...

vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூருக்கு சென்றபோது ஏற்பட்ட அசம்பாவிதத்தில் 41 பேர் உயிரிழந்தனர். தற்போது அந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில்தான் தமிழக முதல்வர் விஜய் இன்று கரூருக்கு சென்றார். அப்போது மக்கள் முன்பு பேசிய அவர் ‘கரூர் சம்பவம் எனக்குள் நிரந்த வலியை ஏற்படுத்திவிட்டது. அப்படி வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்து விட்டேன் என சொன்னார்கள்.. அப்படி எல்லாம் செய்தால் நான் மக்களை விட்டு ஓடி விடுவேன் என நினைத்தார்கள்.. பணமா? ஜனமா? என்றால் நான் ஜனம்தான் முக்கியம் என்று சொல்வேன்.

நாமக்கல்லில் இருந்து கரூருக்கு வரும்போது காவல்துறை எங்களை எச்சரிக்கவில்லை. நெடுஞ்சாலையில் இருந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை எங்களை அழைத்து சென்றது பெரிய நாடகம்.. காவல்துறை அதிகாரிகளை நான் முழுமையாக நம்பினேன்..  நான் பேசி முடித்த போது அவர்களுக்கு நன்றியெல்லாம் சொன்னேன்.. ஆனால் இப்படி ஒரு நாடகம் நடக்கும் என்று அப்போது தெரியாது.  காவல்துறை அதிகாரிகளை வழிநடத்தியது யார்?.. என்று விஜய் கேள்வி எழுப்பினார்.

கரூர் சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு காலகாலத்திற்கும் மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.. அவர்கள் மீண்டும் எழாதபடி அவர்களுக்கு தோல்விகளை கொடுக்க வேண்டும்’ என்று விஜய் பேசினார்..