1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minister vijay meets karur people tomorrow

நாளை கரூரில் முதல்வர் விஜய்!. என்னென்ன ஏற்பாடுகள்?.. வாங்க பார்ப்போம்!..

vijay
தமிழக முதல்வர் விஜய் நாளை கரூர் செல்கிறார். அங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அங்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது என பார்ப்போம்..

இந்த நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இதற்கு முன் நடந்தது போலவே QR கோட் மூலம் மட்டுமே உள்ள அனுமதி அளிக்கப்படும்.

நிகழ்ச்சி நடைபெறக்கூடிய இடத்தை சுற்றிலும் இரண்டு அடுக்கில் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கிறது..

சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது..

10 ஆயிரம் பேர் அமரலாம் என்றாலும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி..

40 அடி நீளம் 60 அடி அகலத்தில் ஒரு பெட்டியில் 315 நபர்கள் அமரும் அளவுக்கு 16 பெட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.. மேலும், ஒவ்வொரு பெட்டியிலும் மின்விசிறி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது..

20 ஆயிரம் பேருக்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது..

முதல்வர் விஜய் 11 மணிக்கு அங்கே பேசுவார் என்றாலும் காலை 8 மணி முதல் பொதுமக்கள் பங்கேற்கலாம்..

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள டிரான்ஸ்பார்ம் மற்றும் மின் கம்பங்களில் யாரும் ஏறாமல் இருப்பதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
முதல்வரின் டேபிளில் தூங்கும் விசிகவின் 2 கோரிக்கைகள்!. அப்செட்டில் வன்னி அரசு!...