கரூர் போலீஸ் எங்களை அலார்ட் பண்ணவில்லை!.. முதல்வர் விஜய் குற்றச்சாட்டு!..
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று காலை கரூருக்கு சென்றார். அங்கே மக்கள் முன் அவர் பேசியபோது எல்லோரும் தங்களின் வாழ்வில் கஷ்டங்களையும் வலிகளையும் கடந்துதான் வந்திருப்பார்கள்.. நாமும் அப்படித்தான் வந்திருக்கிறோம். குறிப்பாக கரூர் சம்பவத்தில் அதிகமான வலியும் வேதனையும் நான் சந்தித்தேன்..
நாங்கள் பெரம்பூரில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.. கூட்டம் அதிகமாக இருப்பதை காரணம் காட்டி காவல்துறை எங்களை ரத்து செய்ய சொன்னது.. காவல்துறை சொல்லிவிட்டால் கேட்டுத்தான் ஆகவேண்டும். எனவே, நாங்கள் அதை ரத்து செய்தோம்.. அதேபோல் கரூரில் எங்களை காவல் துறை எச்சரிக்கை செய்திருந்தால் அந்த கூட்டத்தை ரத்து செய்திருப்போம்.. ஆனால் காவல்துறையினர் எங்களை உள்ளே கூட்டி சென்றார்கள். அந்த இடத்தில் அனுமதி கொடுத்ததும் காவல்துறைதான்.
அவர்கள் அப்படி செய்ய சொன்னது யார்? அவர்களை வழிநடத்தியது யார்? இதையெல்லாம் செய்ததோடு மட்டுமல்லாமல் நான் ஓடிப்போய் எழுந்து கொண்டேன் என்றெல்லாம் பேசினார்கள். வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?.. என்ன நடந்தது என்று இரண்டு, மூன்று நாட்கள் யோசிப்பதற்குள் நான் பயந்து வீட்டுக்குள் முடங்கி விட்டேன் என பேசினார்கள்..
சட்டசபையில் அப்போதைய முதல்வர் முக ஸ்டாலின் என் மீது பழிபோட்டார். அப்படி நடந்து கொண்டவர்களுக்கு 2026 தேர்தலில் நீங்கள் தகுந்த பாடம் கொடுத்து விட்டீர்கள்.. ஆனால் இனிமேல் எந்த தேர்தலிலும் அவர்கள் எந்திரிக்க முடியாதபடி வாழ்நாள் முழுவதும் அவர்களை நீங்கள் உட்கார வைக்க வேண்டும்.. அவர்களுக்கு தொடர்ந்து நீங்கள் தோல்வியை பரிசளிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் பேசியிருக்கிறார்.