1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai people is affraid of recent crimes

ஒரே நாளில் 12 இடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை!.. சென்னை மக்கள் அதிர்ச்சி..

crime
தமிழகத்தில் புதிய அரசு பதவி ஏற்று ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. விஜய் முதலமைச்சராகியிருக்கிறார். ஒருபக்கம், கடந்த ஒரு மாதமாகவே தமிழகத்தில் சிறுமிகள் முதல் பெண்கள் வரையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

மூன்று வயது மற்றும் ஏழு வயது சிறுமிகள் கூட வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். சமீபத்தில் கூட திருவள்ளூரில் வட மாநில வாலிபர் ஒருவரால் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்..

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மட்டும் பெண்களுக்கு எதிராக 12 பாலியல் குற்ற சம்பவங்கள் காவல் நிலையத்தில் பதிவாகியிருக்கிறது. இவற்றில் திருவள்ளூரில் பீகாரை சேர்ந்த 3 வயது சிறுமி உட்பட 8 சிறுமிகள் மற்றும் 4 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் சிறுமிகள் முதல் பெண்கள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
ஓஎம்ஆர் - ஈசிஆர் இணைப்பு சாலை மட்டும் போட்டுட்டா 5 நிமிஷத்துல போயிடலாம்".. வாகன ஓட்டிகள் கோரிக்கை..