1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Pachaiyappa students in combat

பச்சையப்பன் கல்லூரியில் ரூட்டு தல பஞ்சாயத்து..! – ஊர்வலம் சென்ற மாணவர்கள் மீது வழக்கு!

Tamilnadu
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ரூட்டு தல விவகாரத்தில் ஊர்வலம் சென்ற 200 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக மூடியிருந்த கல்லூரிகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களிடையே மோதல்கள் எழுந்து வருகிறது. நேற்று சென்னை மின்சார ரயிலில் இரண்டு கல்லூரி மாணவர்கள் இடையே எழுந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதேபோன்ற சம்பவம் பச்சையப்பன் கல்லூரியிலும் நடந்துள்ளது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே எது சிறந்த ரூட் என்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மூன்று பிரிவாக பிரிந்த மாணவர்கள் பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவிக்கு ஊர்வலமாக சென்றுள்ளனர்.

இந்த விவகாரத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது தொற்றுநோய் பரவல் தடுப்பு விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை! – மதுரை மாநகராட்சி எச்சரிக்கை!