1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Central Govt extend VISA for foreigners

இந்தியாவில் சிக்கித்தவிக்கும் வெளிநாட்டினர்! – விசாவை நீட்டித்த மத்திய அரசு!

India
சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினருக்கு விசா நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முன்பாக பல்வேறு வகை விசாக்களில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தவர்கள் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டதால் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் இந்தியாவில் தொடர்ந்து தங்க மத்திய அரசு விசா காலத்தை நீட்டித்து வருகிறது. அந்த வகையில் விசா காலம் கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிந்த நிலையில் விசாவை மேலும் இந்த மாதம் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
தடுப்பூசிக்கெல்லாம் அடங்காது? உலகை உலுக்கும் “மு” வைரஸ்! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!