இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஏழு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் தோன்றியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாக வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு...