சென்னையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் நாளை கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மிக கனமழை பெய்யும் என வானிலை அறிக்கையை ஆய்வு மையம் திரும்ப பெற்றுக் கொண்டாலும் மிதமான மழை முதல் கனமழை பெய்து உறுதி என்றே தெரிகிறது.
இந்த நிலையில் நாளை சென்னையில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 21ஆம் தேதி சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் விழுப்புரம் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இன்று மாலை முதல் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Edited by Siva