1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain warning - Tamil Nadu government withdraws!

கனமழை எச்சரிக்கையை வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு!

rain
தமிழகத்தில் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு தினங்களில் மிக கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையை நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்ற நிலையில் சற்று முன் தமிழ்நாடு அரசும் கனமழை எச்சரிக்கை வாபஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டல, வலுவடைந்து வந்தாலும் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மிக கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு வாபஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு புதுவையில் இன்னும் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
64.28 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!