இன்று மாலைக்கு மேல் மழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வட மாவட்டங்களில் இன்று மாலைக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும் என்று அறிவித்துள்ளது
தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
Edited by Siva