1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai highcourt order about plastic ban

முதல்வர் தொகுதியில் பிளாஸ்டிக் தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

பிளாஸ்டிக்
பிளாஸ்டிக் தடை குறித்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார் 
 
2019ஆம் ஆண்டு தமிழக அரசு பிளாஸ்டிக் தடை அமலுக்கு கொண்டு வந்தது. ஆனால் இதனை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் வழக்கு தொடுத்தது.
 
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக எந்த பொருளை மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறீர்கள் என்றும், முதலில் பிளாஸ்டிக் தடையை முதல்வரின் சொந்த தொகுதியில் அமல்படுத்துங்கள் என்றும் நீதிபதிகள் கூறினர்
 
மேலும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் பிளாஸ்டிக்கை தடை செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பி இந்த வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 
அடுத்த கட்டுரையில்
முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை நூலை வெளியிட்ட ராகுல்காந்தி!