மானை வேட்டையாடிய 3 பேரை என்கவுண்டர் செய்த வனத்துறை!....
மான்களை வேட்டையாடக்கூடாது என பல வருடங்களுக்கு முன்பே இந்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனாலும், பலரும் இதை இப்போதும் செய்து வருகிறார்கள். மானை வேட்டையாடி இறைச்சியை ஒன்று விற்பனை செய்துவிடுகிறார்கள் அல்லது அவர்களே சாப்பிட்டு விடுகிறார்கள்.
பல வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சல்மான்கான் மானை வேட்டையாடிய வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்டது. அதன்பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். பல வருடங்கள் சல்மான்கான் இந்த வழக்கை சந்தித்தார். இந்நிலையில்தான், மானை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடகா சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் உட்பட்ட வனப்பகுதியில் வேட்டையாடச் சென்ற 3 பேரை வனத்துறையினர் என்கவுண்டர் செய்தனர். ஹனூர் பகுதியை சேர்ந்த 4 பேர் மானை வேட்டையாடிவிட்டு இறைச்சியை பிரித்துக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் மட்டும் தப்பி சென்றுவிட்டார்.
உயிரிழந்த குடும்பத்தினர் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.