1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (08:47 IST)

எல்லை மீறிய ரஷ்யா; ஊடக விளம்பரத்தை தடை செய்த கூகிள்!

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில் அதை கண்டிக்கும் விதமாக கூகிள் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்ய அரசு மற்றும் தனியார் விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ளன.

உலக நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாது ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்துள்ளது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் இந்த படையெடுப்பை கண்டிக்கும் விதமாக பேஸ்புக் மற்றும் யூட்யூப் நிறுவனங்கள் ரஷ்யாவின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தளங்களில் விளம்பரம் செய்து வருவாய் ஈட்டுவதற்கு தடை விதித்தன.

அதை தொடர்ந்து தற்போது கூகிள் நிறுவனமும் ரஷ்யா அரசு மற்றும் தனியார் நிறுவன விளம்பரங்கள் தங்களது தேடுபொறியில் இடம்பெறுவதற்கு தடை விதித்துள்ளது. இந்த தடையால் ரஷ்ய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வருவாயில் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.