1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Russia warn Nato about Ukraine support

உக்ரைனுக்கு ஆயுதம் தந்தால்…! – நேட்டோவை எச்சரிக்கும் ரஷ்யா!

World
உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ள ரஷ்யா, நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வது குறித்து எச்சரித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

ரஷ்யாவை விட வலிமை குறைந்த நாடான உக்ரைன் இந்த போரில் பொதுமக்களையும் ஈடுபடுத்தி போராடி வருகிறது. உக்ரைனுக்கு தேவையான நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை வழங்க ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கினால் பெரும் பிரச்சினையை சந்திக்க வேண்டி வரும் என்று தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
முதல்வர் தொகுதியில் பிளாஸ்டிக் தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு!