1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (15:38 IST)

கொரோனா குறைந்தாலும் சர்வதேச விமான தடை தொடரும்! – இயக்குனரகம் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைய தொடங்கிய நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த தடை பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் இந்த தடைக்காலம் முடிவடையும் நிலையில் தடையை முடிவடையுமா என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், இந்தியாவில் கொரோனா குறைந்திருந்தாலும் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை தொடரும் என அறிவித்துள்ளது. சிறப்பு விமானங்கள் மட்டும் அனுமதியுடன் தொடர்ந்து இயங்கும் என கூறப்பட்டுள்ளது.