1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kanimozhi comment against tvk government

கொலையில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு!.. கனிமொழி ஆவேசம்..

kanimozhi vijay
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் எதிர்கட்சியான திமுக தவெக ஆட்சியின் மீதும், முதல்வர் ஜோசப் விஜய் மீதும் கடும் விமர்சனங்களை வைத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் மோசமாக இருப்பதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் ‘தமிழ்நாட்டில் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்கிற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. ஒவ்வொரு நாளையும் அச்சத்துடனும் அதிர்ச்சியுடனும் மக்கள் கடந்து கொண்டிருக்கிறார்கள். கல்வியில் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை, கொலைகளிலும் முதலிடத்திற்கு கொண்டு செல்லப் போகிறதா இந்தப் பொறுப்பற்ற அரசு?..

சட்டம் ஒழுங்கில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாட்டின் நிலை இன்று எங்கே சென்று கொண்டிருக்கிறது? இதுதான் தவெக சொன்ன மாற்றமா?..’ என பதிவிட்டிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வீடியோ வேண்டாம்.. நிறுத்துங்க.. சென்னை நிகழ்ச்சியில் டென்ஷனான நிர்மலா சீதாராமன்..