1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. PMK Leadership Tensions with ADMK After 2026 Polls

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தர அன்புமணி விரும்பவில்லையா? கூட்டணியில் திடீர் குழப்பம்...

பாமக அதிமுக கூட்டணி
2026 தேர்தலில் அதிமுக கூட்டணி சரியாக களப்பணி செய்திருந்தால் பாமக குறைந்தது 10 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என்று அக்கட்சியினர் பேசி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்த போதிலும், பாமக போட்டியிட்ட இடங்களில் அதிமுகவினர் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளிடையே மனக்கசப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பாமகவினர் இதனை பெரிதுபடுத்தாமல் அமைதியாக கடந்து சென்றனர். ஆனால், அதிமுகவினரின் இந்த சலனமற்ற போக்கினால்தான் பாமக குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றது என்று கட்சித் தலைவர் அன்புமணி கருதுவதாகவும், இதனால் அவர் அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இதன் காரணமாக, இடைத்தேர்தலில் பாமக ஆதரவு தேவை என்ற நிலையில், அதிமுக மூத்த தலைவர்கள் அன்புமணியை சந்திப்பதற்கு நேரம் கேட்டபோதிலும் அவர் இதுவரை அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது. இதனால் எதிர்காலத்தில் பாமக தங்களின் கூட்டணியை தொடருமா என்ற சந்தேகம் அதிமுக தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
 
மதுராந்தகம் போன்ற பகுதிகளில் பாமகவிற்குப் பலமான வாக்கு வங்கி உள்ளதால், அவர்கள் விலகினால் அது தங்களுக்கு பெரிய பின்னடைவாக அமையும் என்று அதிமுக தொண்டர்கள் அஞ்சுகின்றனர்.
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
இதுவரை ரூ.15,300 கோடி முதலீடு.. முதல்வர் விஜய் லண்டன் பயணம் சூப்பர் வெற்றி...