கரைபுரண்டு ஓடும் காவிரி!.. இன்னைக்கும் ஒகேனக்கல் போகாதீங்க!..
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என தர்நாடகம் சொல்லி வந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கபினி அணை உள்ளிட்ட பல அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடும் நிலைக்கு கர்நாடகா ஆளாகியிருக்கிறது. கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே தொடர்ந்து கபினி அணையிலிருந்து பல ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த செவ்வாய்கிழமை காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதைத்தொடர்ந்து ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.