பாஜக பேர சொல்ல கூட பயம்!.. முதல்வருக்கு திராணி இல்லை.. உதயநிதி அட்டாக்!...
மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறியதாக தவெக அரசை கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குருவை நெல் பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதல்வர்தான் காரணம். விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் டம்மி முதல்வர் விஜய் அமைதியாக இருக்கிறார்.
ஆடி 18ம் நாளான இன்று ஆடிப்பெருக்கு வழிந்து ஓட வேண்டும். ஆனால் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. திமுக ஆட்சியில் இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?.. பாதிக்கப்பட்ட விவசாயிகளை சிந்திக்காமல் கர்நாடக முதலமைச்சரை பார்க்கிறேன் என்கிறார்.. வரோ இந்த பக்கமே வர வேண்டாம் என சொல்லிவிட்டார்.. ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகியும் பாஜக என்ற சொல்லை கூட உச்சரிப்பதற்கு தைரியமில்லாதவர்தான் முதலமைச்சர் விஜய்.
அதேபோல், கர்நாடகாவில் காங்கிரஸ் எதிர்த்து பேசவும் அவருக்கு தைரியம் இல்லை.. திராணி இல்லை.. விவசாயிகள் கண்ணீர் விடும் நிலையில் தவெக அமைச்சர்கள் சினிமாவை பார்த்து அழுது கொண்டிருக்கிறார்கள்.. லாட்டரி விற்றவர், திருட்டு விசிடி விற்றவர்.. பிளாக்கில் டிக்கெட் விற்றவர்கள் எல்லோரும் அமைச்சர்கள். இப்படிப்பட்ட ஜோக்கர் கூட்டம்தான் அமைச்சரவையில் இருக்கிறது. ரீல்ஸ் போடுவதை தவிர முதல்வர் விஜய்க்கு வேறு வேலையில்லை என அவர் பேசினார்.