1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. bluesattta maran comment against tvk vijay

126 தொகுதிகளில் தவெகவுக்கு போட்டதும் கொத்து பரோட்டாதானே... புளூசட்டமாறன் விளாசல்!..

bluesatta maran
இன்று கரூரில் பேசிய முதல்வர் விஜய் கரூர் விஷயத்தில் திமுக என்னை பலிகாடாக்கியது. என் மிது வேண்டுமென்றே பழி சுமத்தினார்கள். சட்டசபையில் பேசிய முக ஸ்டாலின் என் மீது பழி போட்டார். அதற்கு மக்கள் சரியான தண்டனையை கொடுத்துவிட்டார்கள். நான் 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள் என பேசியிருந்தார்.
இது திமுகவினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

இதையடுத்து தவெக வெற்றி பெற்றது 108 தொகுதிகளில் மட்டுமே. மீது 126 தொகுதிகளில் தோல்வியடைந்திருக்கிறது. அதை மறந்துவிட்டு விஜய் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் முதலமைச்சர் என்பதையே மறந்துவிட்டு பேசுகிறார் என கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் தனது எக்ஸ் தளத்தில் ‘தவெகவை  துறைமுகம் தொகுதியில் தூள் பக்கோடா போட்டு, சேப்பாக்கத்தில் சேமியா பாயாசம் போட்டதே திமுக... அதை பற்றி பேச மாட்டீர்களா?.. 234 தொகுதிகளில் 126 தோல்வி அடைந்தீர்களே! .அங்கே மக்கள் தவெகவிற்கு போட்டதும் கொத்து பரோட்டாதானே?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
விஜயின் முதுகுதான் கரூர் நினைவுச் சின்னம்!. கலாய்க்கும் திமுக!...