1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk ex minister sivasankar comment about vijay

விஜயின் முதுகுதான் கரூர் நினைவுச் சின்னம்!. கலாய்க்கும் திமுக!...

vijay
இன்று கரூரில் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய் நாமக்கல்லில் இருந்து கரூருக்கு சென்றபோது போலீசார் தடுத்திருந்தால் அந்த கூட்டம் நடைபெற்றிருக்காது. போலீசார் நினைத்திருந்தால் கூட்டத்தை ரத்து செய்திருக்க முடியும். ஆனால் கரூர் பைபாஸிலிருந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு காவல்துறைதான் எங்களை அழைத்துச் சென்றது.. அது மிகப்பெரிய நாடகம்’ என கூறியிருந்தார். மேலும் கரூரில் இறந்தவர்களின் நினைவாக அங்கே நினைவுச் சின்னம் எழுப்பப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்..

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ‘ இடைத்தேர்தலுக்காகத்தான் கரூருக்கு சென்றிருக்கிறார் முதல்வர் விஜய். கரூரை விட்டு ஓடியது யார் என்று மக்களுக்கு தெரியும். பயந்து ஓடிய விஜயின் முதுகுதான் கரூரில் நினைவுச் சின்னமாக வைக்கப்பட வேண்டும்..

துயரத்தில் இருந்ததாக சொல்லும் விஜய் திருமண விழாவில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டார்.. தன் தவறுகளை மறைத்து விட்டு திமுக மீது குற்றம் சாட்டுகிறார்.. முக ஸ்டாலின் மட்டும் நினைத்து இருந்தால் விஜய் மீது வழக்கு தொடுத்திருக்க முடியும்.. ஆனால் அவர் செய்யவில்லை.. இன்று நேரத்திற்கு சென்ற விஜய் அப்போது ஏன் தாமதமாக சென்றார்?.. தான் முதலமைச்சரானதை மறந்துவிட்டு விஜய் பேசிக் கொண்டிருக்கிறார்’ எனக்கூறியிருக்கிறார்.