1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. blue sattai maran tweets about tvk

இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு: தவெகவை நக்கலடித்த ப்ளுசட்டை மாறன்

blue sattai maran
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் தீவிரமான பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் இளைஞர்களும், பெண்களும் திரண்டு வருவது அரசியல் களத்தில் பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் அவரது அரசியல் பயணத்திற்குப் பின்னடைவாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் கடந்த வாரம் முதலே தமிழகம் எங்கும் பரபரப்பாக பேசப்படுகிறது. அவர் அந்த மனுவில், "தனது கணவர் நடிகை ஒருவருடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும், தான் கண்டித்தும் அதனை அவர் பொருட்படுத்தவில்லை என்றும் சங்கீதா குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இதனால் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது விஜய்யின் அரசியல் எதிரிகளுக்கு ஒரு ஆயுதமாக மாறியது.
 
இந்த பிரச்சனைகளை தொடர்ந்து விஜய் தஞ்சையில் நடந்த பொதுகூட்டத்தில் கலந்துகொண்டார். வழக்கம்போலவே அவரது ரசிகர்கள் குவிந்தன. பல இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பெண், குப்பை பொறுக்குபவனே இரண்டு பொண்டாட்டி வைத்திருக்கிறான், கூட்டுபவள் நான்கு புருஷன் வைத்திருக்கிறாள். காசு இல்லாதவர்களே 10 பொண்டாட்டி, 10 புருஷன் வைத்துக்கொண்டு ஜாலியாக இருக்கும்போது, எங்களிடம் காசு இருக்கிறது, நாங்கள் வைத்துக்கொள்வோம். வைத்துக்கொள்ளாமல் போவோம் என்ரு பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்தனர்.
 
இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்,  தவெக மகளிர் ஆர்மியின் பேச்சுகள் அனைத்தும் அட்டகாசம். இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு  என்று பதிவிட்டுள்ளார்.  
அடுத்த கட்டுரையில்
சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!