1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 5 மார்ச் 2026 (15:19 IST)

சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!

சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப்புகழ் பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் அவர்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
இந்த சிறப்பு ரயில் விழுப்புரத்திலிருந்து காலை 9:10 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1:05 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். மீண்டும் மறுமார்க்கமாக, நாகப்பட்டினத்திலிருந்து மதியம் 1:20 மணிக்கு புறப்பட்டு, மாலை 5:30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். 
 
கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயில் சேவை, தொலைதூர பயணிகளுக்கும் பெரும் உதவியாக அமையும். 
 
சனி பகவானைத் தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva