இன்னும் 100 வருஷம் ஆனாலும் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வராது.. கடைசி வரை அடிமையாக இருங்க.. தவெகவினர் கிண்டல்..!
தமிழக அரசியலில் 'தமிழக வெற்றிக் கழகம்' மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே நிலவும் வார்த்தை போர் தற்போது முற்றியுள்ளது.
விஜய் தலைமையில் புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள தவெக தொண்டர்கள், காங்கிரஸ் கட்சி தங்கள் கூட்டணிக்கு வராததால் அக்கட்சியை சமூக வலைதளங்களில் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.
"இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது; கடைசி வரை மற்ற கட்சிகளுக்கு அடிமையாகவே இருக்க வேண்டியதுதான்" என அவர்கள் பதிவிட்டு வரும் கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது உறுதியான நிலையில், தவெகவினர் இந்த கூட்டணியை 'அடிமைத்தனம்' என விமர்சிக்கின்றனர். குறிப்பாக, தன்னாட்சி அதிகாரம் இல்லாமல் தொகுதிகளுக்காக கெஞ்சும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளதாக தவெக தரப்பு குற்றம் சாட்டுகிறது.
இதற்கு பதிலடியாக, "அரசியல் அரிச்சுவடியே தெரியாதவர்கள் எங்களை கிண்டல் செய்கிறார்கள்" என காங்கிரஸ் நிர்வாகிகள் கொதிப்படைந்துள்ளனர். 2026 தேர்தலை முன்னிட்டு நிலவும் இந்த மோதல், தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய துருவமுனைப்பை உருவாக்கியுள்ளது.
Edited by Siva