1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. bjp planning to make admk government in next

விஜய் ஓட்டை பிரிப்பார்!. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது!.. பாஜக போட்ட மெகா ஸ்கெட்ச்!..

mk stalin
தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது பாஜகவின் பல வருட கனவாக இருக்கிறது. ஆனால் திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளே கடந்த 50 வருடங்களுக்கும் மேல் இங்கே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறார்கள். தமிழக மக்களும் உதயசூரியன் அல்லது இரட்டை இலை இந்த இரண்டில் ஏதோ ஒன்றில்தான் மாறி மாறி வாக்களித்து திராவிட கட்சிகளை ஆட்சியில் அமர்த்துகிறார்கள்..

அதேநேரம் சீமான், விஜய் போன்றவர்கள் தற்போது வந்திருக்கிறார்கள்.. கடந்த பாராளுமன்ற தேர்தலில் சீமான் 8 சதவீத வாக்குகளை பெற்றார். அதேபோல், புதிதாக வந்துள்ள விஜய்க்கு பல லட்சம் ரசிகர்கள் இருப்பதால் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்குவார் என பலரும் சொல்கிறார்கள்..

குறிப்பாக அதிமுகவுக்கு செல்லும் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகளை விஜய் வாங்குவார் என்கிறார்கள். தவெக பிரிக்கும் வாக்குகளால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லாமல் போகும் எனவும், தொங்கு சட்டமன்றம் அமையவே அதிக சாத்தியம் இருக்கிறது என சமீபத்தில் மத்திய உளவுத்துறை கண்டறிந்திருக்கிறது. தனிப்பெரும்பான்மைக்கு வாய்ப்பில்லை என்பதால் அந்த சூழலை தங்களது சாதகமாக்கிக் கொள்ள பாஜக முடிவெடுத்திருக்கிறதாம். எனவே, இப்போதிலிருந்தே அக்கட்சி காய்களை நகர்த்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது..

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க அந்த கட்சியின் உதவி தேவை என்றால் விஜயிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தும் என கணிக்கப்படுகிறது.. ஏனெனில், விஜய் கண்டிப்பாக திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார். அதேநேரம், விஜய் தரப்பு வைக்கும் நிபந்தனைகளை பழனிச்சாமி ஏற்பாரா என்பதுதான் தெரியவில்லை.
அடுத்த கட்டுரையில்
CBSE தேர்வு முடிவுகள்.. கண் தெரியாத மாற்றுத்திறனாளி மாணவி 95% மதிப்பெண் எடுத்து சாதனை..!