1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. bjp decided not to alliance with tvk

ஆணிய புடுங்க வேணாம்!.. தவெகவுடன் கூட்டணி இல்லை!. பாஜக மேலிடம் முடிவு..

vijay
கடந்த சில நாட்களாகவே விஜயின் தமிழக வெற்றிக் கழககம் அதிமுக -  பாஜக கூட்டணியில் இணைகிறது என்கிற செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருந்தது. அதிமுக கூட்டணியில் விஜய்க்கு இவ்வளவு தொகுதிகள்.. துணை முதல்வர் பதவி என்றெல்லாம் பல ஊடகங்கள் செய்து வெளியிட்டன. ஆனால் தவெக தரப்பும், எடப்பாடி பழனிச்சாமியும் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

அதே நேரம் கணிசமான வாக்குகளை வாங்குவார் என நம்பப்படும் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தால் நல்லது என அமித்ஷா கருதினார்.. எனவே பாஜக தரப்பிலிருந்து தவெகவிடம் பேசப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என தவெக சொன்னதால் இழுபறி நீடித்து வந்தது.

ஒருபக்கம் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் வருவதை எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என்கிறார்கள்.. ஏனெனில் தவெகவுக்கு 50க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டியிருக்கும்.. ஏற்கனவே பாஜகவும் 40 தொகுதிகளை கேட்கிறது. அது இல்லாமல் கூட்டணி கட்சிகள் இருக்கிறது.. அப்படி பார்த்தால் 100க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிடும் நிலை ஏற்படும்..

எனவே அந்த கூட்டணி தேர்தல் வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக முடியாது.. கூட்டணி ஆட்சிதான் வரும். ‘யார் முதல்வர்?’ என்பது தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்படும்.. எனவே தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் விஜய் வராமல் இருந்தால் நல்லது என எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார்.. ஒருபக்கம் விஜயும் பிடி கொடுக்கவில்லை.. இதை புரிந்து கொண்ட பாஜக தலைமை தவெகவுடன் கூட்டணி பற்றி இனிமேல் பேசவேண்டாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார்களாம்.

மேலும், தவெகவுடன் கூட்டணி என்பதை மறந்துவிட்டு தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துமாறு தமிழக பாஜகவுக்கு பாஜக மேலிடம் அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது..
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
கரூர் சம்பவம்!.. சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி!. விசாரணை துவங்கியது...