பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ.. சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்...
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மிக அதிவேகமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் பாதை தற்போது திறப்பு விழாவிற்கு தயாராகியுள்ளது. இந்த வழித்தடத்தில் எப்போது வேண்டுமானாலும் மெட்ரோ இரயில் சேவையை தொடங்கலாம் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த முதற்கட்ட வழித்தடம் மொத்தம் 14.6 கிலோமீட்டர் தூரத்தை கொண்டதாகும். இந்த வழித்தடத்தில் பயணிகள் வசதிக்காக தொடக்கத்தில் ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு இந்த புதிய சேவை நகரின் மையப்பகுதியான வடபழனியுடன் இணைப்பை எளிதாக்கும்.
இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த புதிய மெட்ரோ சேவை மிக விரைவில் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
Edited by Siva
