1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. lg company planing to quit china

சீனாவிடமிருந்து வெளியேறி Hisense TV நிறுவனத்துடன் இணையும் LG..

lg tv
செல்போன், டிவி, ஃபிரிஜ், வாசிங் மெஷின், ஃபேன், ஏசி உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான எலக்ட்ரிக் சாதனங்களை சீனாவே அதிகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு உலகமெங்கும் மிகப்பெரிய சந்தை இருக்கிறது.

எனவே, சில இந்திய நிறுவனங்களே சீன நிறுவனங்களுடன் இணைந்து தொழில் செய்து வருகிறது. அதில், எல்.ஜி நிறுவனமும் ஒன்று. ஆனால், சீன நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் லாபமின்மை ஆகிய காரணங்களால் டிவி விற்பனையிலிருந்து வெளியேற LG நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

மேலும், LG டிவி வியாபாரத்தை Hisense TV நிறுவனத்திற்கு விற்பனை செய்யவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே கடந்த 2021ம் வருடம் சீனாவுடனான மொபைல் விற்பனையிலிருந்து LG நிறுவனம் வெளியேறிய நிலையில் தற்போது டிவி வியாபாரத்திலிருந்தும் LG நிறுவனம் வெளியேற முடிவு செய்திருக்கிறது.