1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BJP Annamalai talk about ADMK

அதிமுகவை முந்திக் கொண்டு போயிட்டிருக்கோம்! – அண்ணாமலை கருத்து!

Tamilnadu
தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடுகள் அதிமுகவை முந்தும் வகையில் உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் அதிமுக எதிர்கட்சியாக உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தேர்தலை எதிர்கொண்டிருந்தது. தேர்தல் முடிந்தது முதலாக அதிமுகவில் உட்கட்சி பூசல், சசிக்கலா விவகாரம் போன்றவை தலைதூக்கி வருகின்றன.

இந்நிலையில் தற்போது சந்திப்பு ஒன்றில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ”எதிர்கட்சியாக இருக்கும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னேறுகிறது என்பது மக்களுடைய கருத்து. எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சேர்ந்து எங்களுடைய பணியை செய்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பொங்கல் பரிசாக தமிழக அரசு கொடுக்கும் 20 பொருட்கள்: என்னென்ன தெரியுமா?