1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (11:09 IST)

ரூ.2079 கோடி நிதி தாருங்கள்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை!

வெள்ள நிவாரண நிதியாக ரூ.2079 கோடி தாருங்கள் என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பயிர்கள் மற்றும் பொதுமக்களின் உடமைகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் தர வேண்டிய நிலையில் உள்ள தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.2079 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது
 
மத்திய உள்துறை அமைச்சரிடம் தமிழக அரசு இது குறித்து கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்க என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்