புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (10:31 IST)

பெட்ரோல் & டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம்!

நவம்பர் 22 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தவுள்ளது என பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

 
கடந்த சில மாதங்களுக்கு முன் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை குறைவு காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல் விலை குறையவில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
குறிப்பாக சென்னையில் கடந்த 11 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
இதனை அடுத்து 12வது நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் நவம்பர் 22 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தவுள்ளது என பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து நவமபர் 22 தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.