1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (11:02 IST)

கனவில் வந்து பயமுறுத்திய பேய்? பயத்தில் தற்கொலை செய்துக் கொண்ட காவலர்!

கடலூரில் ஆயுதப்படை காவலர் பேய் பயத்தால் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கடலூர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சமீபத்தில் மனைவி, குழந்தைகள் வெளியூர் சென்று விட்டு வரும்போது பிரபாகரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த விசாரணையில் இறப்பதற்கு 15 நாட்கள் முன்னதாக பிரபாகரன் விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும், அதிகமாக பூஜை அறையிலேயே இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் தங்கியிருந்த காவலர் குடியிருப்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட பெண் ஒருவரின் பேய் தன்னை துரத்துவதாக சிலரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பேய் குறித்த பயத்தால் ஏற்பட்ட மனக்குழப்பத்தால் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.