1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Annamalai Predicts DMK Split After 2026 Defeat During Coimbatore Campaign

தேர்தலுக்கு பின் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்: அண்ணாமலை ஆரூடம்

அண்ணாமலை பேட்டி
கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்காக, ரத்தினபுரி பகுதியில் பாஜகவின் முக்கிய முகமான அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் எதிர்காலம் குறித்த அதிரடி கணிப்புகளை முன்வைத்தார். 
 
2026 தேர்தலில் திமுக தோல்வியை தழுவினால், அக்கட்சி சிதறிவிடும் என்றும், கனிமொழி தனிக்கட்சி தொடங்கும் சூழல் உருவாகும் என்றும் அவர் விமர்சித்தார். முதல்வர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைப்பதாக சாடிய அவர், தோல்வி பயத்தினால் செந்தில் பாலாஜி உளறி வருவதாக குறிப்பிட்டார்.
 
மேலும், ஊழல் புகார்கள் குறித்து பேசிய அண்ணாமலை, அமைச்சர் காந்தி வேட்டி சேலை வழங்கியதில் சுமார் 160 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக ஆதாரங்களுடன் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.  ஆட்சி மாறும்போது இவர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி என்று எச்சரித்தார். 
 
உடல்நலக்குறைவால் ஓய்வில் இருக்கும் வானதி சீனிவாசனுக்காக தாங்கள் களத்தில் நின்று பணியாற்றுவோம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
 
மேலும் ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்தது கண்டிக்கத்தக்கது என்றும்  விசிக தலைவர் திருமாவளவன் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் கூட தற்போது நிதானம் தவறுவதாக அவர் தனது பேட்டியில் வருத்தம் தெரிவித்தார்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா கணவர் மீது போக்சோ வழக்கு.. 16 வயது சிறுமியை திருமணம் செய்தாரா?