1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. annamalai press meet about upcoming electtion

விஜயை நான் சாதாரணமாக நினைக்கவில்லை!.. அண்ணாமலை பேட்டி!...

annamalai vijay
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது.
அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளார்கள். ஒரு பக்கம் விஜயும், சீமானும் தனித்தனியாக போட்டியிவார்கள் எனத் தெரிகிறது.
அதிமுக பாஜக கூட்டணியில் விஜயை கொண்டு வரவேண்டும் என்கிற முயற்சி பல மாதங்களாகவே நடந்து வருகிறது.

ஆனால் விஜய் இன்னும் பிடிகொடுக்காமல் இருக்கிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக-பாஜக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டிகள் இருக்கிறது.

எங்களைப் பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். திமுகவுக்கு எதிரான வாக்குகளை நாங்கள் பெற முயற்சி செய்வோம்.. மற்றவர்களை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது.. நாம் தமிழர் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என சொல்லாமலேயே 8 சதவீதமாக வாக்குகளை வாங்கியிருக்கிறார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் அவர் எவ்வளவு வாக்குவார்கள் என்பதை பார்க்க வேண்டும். அதேபோல், விஜயையும் நான் சாதாரணமாக நினைக்கவில்லை. பல இடங்களில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பணியாற்றி வருவதை பார்க்கிறேன். விஜய் திமுக வேண்டாம் என்று சொல்கிறார்.. அப்படி என்றால் யார் வேண்டுமென்று அவர் சொல்ல வேண்டும்.. அந்த கேள்வியை நீங்கள் விஜயிடம்தான் கேட்க வேண்டும்.. அதற்கு நான் பதில் சொல்ல முடியாது’ என்று சொல்லி இருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சென்னையில் 18 இடங்களை சுற்றிப்பார்க்க வெறும் 50 ரூபாய்.. இன்று முதல் அசத்தல் சேவை..!