தொடர்புடைய செய்திகள்
- கோட் பிரச்சன இல்ல!.. எல்லாத்தையும் கோட்டை விடுறதுதான் பிரச்சனை!.. விஜய் அட்டாக் பண்ணும் உதயநிதி!...
- இல்லாத எதிரி கூட சண்ட செஞ்சிட்டோம்!. நாங்க பண்ண தப்பு!.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு..
- நாளை புதிய கட்சியை அறிவிக்கும் அண்ணாமலை!.. தமிழக அரசியலில் பரபரப்பு...
- ஆட்சியமைப்பது பற்றி ஸ்டாலின் சொன்னது இதுதான்!.. மார்க்சிஸ்ட் சண்முகம் பேட்டி!..
- சாதி மதம் பார்த்துதான் சீட்டே கொடுத்தீங்க!. நீங்க சாதி மதத்தை ஒழிச்சிட்டீங்களா?!...
புதிய பாதை.. புதிய இயக்கம்.. புதிய அரசியல்!.. அண்ணாமலை வெளியிட்ட வீடியோ..
தமிழக பாஜக தலைவர்களில் கவனிக்கத்தக்க ஒருவராக இருந்தவர் அண்ணாமலை, இவர் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். தமிழக பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலை மிகவும் சிறப்பாகவே செயல்பட்டார். அவர் பாஜக தலைவராக இருந்தபோதுதான் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியும் கொஞ்சம் அதிகரித்தது.
அதேநேரம் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரிடமிருந்த பாஜக தலைவர் பதவி பறிக்கப்பட்டதாக சொல்லப்படது. இந்நிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தலைவர்களை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். எனவே அவர் விரைவில் அவர் புதிய அரசியல் கட்சி தொடங்குவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர்..
இந்நிலையில் ஒரு வீடியோவை அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார். அதில் டிசம்பர் 4, 2025 அன்றே பாஜகவிலிருந்து வெளியேறி செல்ல திட்டமிட்டேன். ஆனால் தேர்தல் பணியை முடித்துவிட்டு செல்லுங்கள் என கூறினார்கள். கட்சியின் உண்மை தொண்டனாக அதை செய்தேன். தற்போது சரியான தருணம் வந்திருக்கிறது. 18 மாதங்களாக பாஜக தலைமையிடம் கருத்து வேறுபாடு இருந்தது. எனது கருத்துக்கு பாஜக தலைமை செவி சாய்க்கவில்லை. எனவே எதிர்காலத்தை நோக்கி பயணப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பாஜகவிலிருந்து வெளியே வருகிறேன்.
தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை நாங்கள் தொடங்கவிருக்கிறோம். மாறுவோம் மாற்றுவோம் என்பதுதான் நமது இயக்கத்தின் கொள்கை. முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டு வந்து பிறகு அரசியல் சொல்லிக் கொடுத்து அதை கட்சியாக மாற்றுவேன். நான் தொடங்கவுள்ள இயக்கம் தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொது தேர்தலில் கட்டாயம் போட்டியிடும்.
சிறந்த மூளைகளை அரசியலுக்கு கொண்டு வருவேன். அதற்கு சிறிது காலம் அவகாசம் தேவைப்படும். தமிழ்நாட்டின் அரசியல், மொழி இலக்கணத்தை மாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். சமரசம் இல்லாத கொள்கை கொண்ட இயக்கமாக வழி நடத்துவது என் இலக்கு என அவர் கூறியிருக்கிறார். மேலும் The moment belongs to the people என்கிற இயக்கத்தை அண்ணாமலை தொடங்கியிருக்கிறார். ஆன்லைன் மூலம் இந்த இயக்கத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் இணைந்துள்ளனர்.
