3 ஆயிரம் கோடி ஊழல்!.. விஜய் கவனமா இருக்கணும்.. எச்சரிக்கும் ராமதாஸ்...
கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழலை தவெக அரசு கையிலெடுத்து அந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அடுத்து கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் செந்தில் பாலாஜியின் மீதும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை எச்சரித்துள்ளார்..
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்க கடந்த ஆட்சியில் சூழ்ச்சி நடந்தது. அதையும் நாங்கள்தான் தடுத்து நிறுத்தினோம். பிரிகேட் உங்களுக்கு தெரியும். அந்த இடத்திலேயே அனுமதிகள் வழங்கப்பட்டன. 3 ஆயிரம் கோடி ஊழல் அது. ஒரு நிறுவனத்திற்கு இத்தனை கோடி என்றால் எத்தனையோ நிறுவனங்கள் அந்த நிலத்தை ஆக்கிரமிக்க திட்டமிடுன்றன.
இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள். இதே அதிகாரிகள்தான் திமுக ஆட்சியிலும் இருந்தார்கள். இப்போதும் அவர்கள்தான் இருக்கிறார்கள்.. அப்படி இருக்கும் போது எப்படி விஜய் நல்லாட்சி கொடுக்க முடியும்? ஊழல் இல்லாத ஆட்சியை எப்படி வழங்க முடியும்? முதலமைச்சர் விஜய் இதில் நேரடியாக தலையிடவில்லை என்றால் ரூ.50,000 கோடி என்ற மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு முதலமைச்சர் விஜய் மீது வரும் என அவர் எச்சரித்துள்ளார்.