1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ct nirmalkumar says admk and dmk planing to buy tvk mlas

தவெக எம்.எல்.ஏக்களுக்கு ரூ.70 கோடி வரை ஆஃபர் - சிடி நிர்மல்குமார் புகார்

nirmal kumar
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணியில் இருந்த அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தது. அதன்பின் அதிமுகவிலிருந்து 7 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.

அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நடந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. விரைவில் காலியாக உள்ள மீதி 6 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதிமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறிவரும் நிலையில் அதிமுகவும், திமுகவும் இணைந்து தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக தவெக புகார் கூறி வருகிறது.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மதுரை தவெக எம்.எல்.ஏ முஸ்தபா, அதிமுகவும், திமுகவும் இணைந்து தவெக அரசுக்கு எதிராக சட்டசபையில் கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க தன்னிடம் ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக கூறியிருந்தார்..

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் ‘எங்கள் எம்.எல்.ஏக்களுக்கு ரூ.70 கோடி வரை ஆஃபர் கொடுத்தவர்கள் சிக்கி கைதாகி நிற்கிறார்கள். பாஜகவின் ஆதரவோடு மீண்டும் எடப்பாடியும், திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவும், அதிமுகவும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளனர். உட்கட்சியில் எதிர்ப்பு கிளம்பினால் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்துவார்கள்.. அனைவரும் சேர்ந்து தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்’ என கூறியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
81 ஆயிரம் கோடிக்கு தங்கம் வாங்கிய இந்தியர்கள் - டாப் 2-வில் இந்தியா