நாடே உங்களை நம்பி இருக்கிறது.. நானும்தான்! - விருது விழாவில் முதல்வர் விஜய் பேச்சு
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற தவெக கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அதன்பின் மாணவர்களுக்கு முன்பு அவர் பேசியதாவது:
உங்களுக்கு வெறும் வணக்கம் சொல்லி கடந்து போக முடியாது.. உங்கள் அனைவருக்கும் பெரிய பெரிய நன்றிகளை சொல்ல வேண்டும்.. குறிப்பாக என்னுடைய நண்பா நண்பீஸ் அனைவருக்கும் கோடி கோடி நன்றிகள் . ஒரு மேடைக்கு உறுதியான அடித்தளம் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.. இந்த மேடைக்கு அந்த உறுதியான அடித்தளமே நீங்கள்தான். இதை எதிர்பார்ப்புகள் இல்லாத உண்மையான அன்பு என்றுதான் சொல்ல வேண்டும்.. என் வாழ்க்கை.. என் முதுகெலும்பும், ஊக்கமும் நீங்கள்தான்.. இப்படிப்பட்ட வரத்தை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி..
நான் இங்கு முதலமைச்சராக வரவில்லை. உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன். உங்களுக்கும் சேர்த்துதான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்.. 2029க்கு இப்போதைய தயார் பண்ண போகிறார் என்று நீங்கள் நினைக்கலாம்.. அப்படி எதுவும் இல்லை.. நான் இங்கு அரசியல் பேசவோ ஓட்டு கேட்கவோ வரவில்லை..
உங்களை நம்பித்தான் உங்கள் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.. நம் சமூகம் இருக்கிறது.. நானே உங்களை நம்பித்தான்இருக்கிறேன்.. ஏன் தமிழ்நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது.. இப்போதைக்கு உங்களுக்கு இந்த கட்சி, அரசியல் எல்லாம் தேவையில்லை.. நன்றாக படியுங்கள்.. பெரிதாக சாதியுங்கள்.. உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழுங்கள்.. அதன்பிறகு நாம் ஊரைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் யோசியுங்கள் என்று அவர் பேசினார்.