1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. anbumani ramadoss talk about tvk alliance

வீர வசனம் பேசாதீங்க.. கொஞ்சம் அடக்கி வாசிங்க!.. அன்புமணி கோபம்...

anbumani
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்திருக்கிறது. மேலும், ஆட்சியமைக்க 8 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டபோது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன.

எனவே, கம்யூனிஸ்ட் தவிர மற்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் விஜய் இடம் கொடுத்திருக்கிறார். எங்களின் தயவால்தான் தவெக ஆட்சி அமைத்திருக்கிறது என திமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆனால், கூட்டணி கட்சிகள் எங்களை ஆதரித்தது அந்த கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம்.. அந்த கட்சிகளால்தான் இத்தனை வருடங்களாக நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள் என தவெக சொல்கிறது.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘மக்கள் ஆதரவு கொடுக்குறாங்கன்னு காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஆவேசமாக பேசிகிட்டு இருக்காங்க.. காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகியோரின் திமுகவின் தயவால்தான் வெற்றி பெற்றார்கள்.. அப்புறம் இந்த பக்கம் வந்துட்டாங்க.. அங்க போயிட்டு வீர வசனம் பேசுவதில் அர்த்தமே இல்லை.. கொஞ்சம் அடக்கி வாசிங்க’ என பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு?!.. வெளியான அப்டேட்!...