1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thirumavalan talk about karur issue related vijay

விஜயை கைது பண்ணுங்க சொன்னேன்!. கேட்டீங்களா?!.. திமுகவுக்கு திருமா கேள்வி...

thiruma
சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு 108 தொகுதிகள் கிடைத்து ஆட்சியமைக்க மேலும் 8 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டபோது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக கேட்டது.  அந்த கட்சிகள் அனைத்தும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததால் விஜயும் முதலமைச்சராகிவிட்டார்.
இதில் விசிக, முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு விஜய் அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறார். அதாவது அந்த கட்சிகளின் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்..

இதில் மற்றவர்களை விட்டு இதில் காங்கிரஸையும், திருமாவளவனையும் திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் இருந்ததால் கிடைத்த வெற்றியை வைத்து பதவிக்காக தவெகவுடன் சேர்ந்துவிட்டார் என அவர்கள் திருமாவளவனை திட்டி வருகிறார்கள்..

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் ‘கரூர் நெரிசல் விவாகரத்தில் விஜய் மீது ஏன் திமுக அரசு வழக்கு பதிவு செய்யவில்லை? தவெகவை குறைவாக மதிப்பிட்ட திமுகவின் கணிப்புதான் அனைத்திற்கும் காரணம். அதற்கு ஏற்ப எதிர அரசியல் செய்திருக்க வேண்டாமா?.. கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட வேண்டும் என்று நான் சொன்னேனா இல்லையா?.. வேண்டுமென்றே காலம் தாழ்த்தி நெரிசல் ஏற்பட்டு கரூர் சம்பவம் நிகழ்ந்த போது அதற்கு பொறுப்பேற்ற அத்தனை பேரையும் வழக்கில் சேர்த்து, விஜயின் அரசியலை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்..

பதவிக்காக கூட்டணி மாறியதாக என் மீது வன்மத்தை தக்குகிறார்கள். பதவி ஆசை இருந்திருந்தால் காங்கிரஸ் போனதுமே நானும் தவெக கூட்டணிக்கு போயிருப்பேன். பதவிக்காக தவெகவுக்கு போய்விட்டதாக பேசும் சிலருக்கு விசிக வரலாறு தெரியாது. திரை கதாநாயகனாகவோ, வேறு சாதியை சேர்ந்தவனாகவோ இருந்திருந்தால் தூக்கி கொண்டாடியிருப்பார்கள்’ என அவர் பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வன்னி அரசு 10 நாளைக்கு அமைச்சரா இருக்கட்டும்னு நினைச்சேன்!.. திருமா ஓப்பன்..