ஸ்டாலினை தடுத்த மும்மூர்த்திகள்!.. அதனால்தான் தோல்வி!.. அன்புமணி ராமதாஸ் கோபம்!..
தமிழகத்தில் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல வருடங்களாக கூறி வருகிறார். இதில் உண்மை என்னவெனில், சமூக நீதியை தூக்கி பிடிக்கும் திமுக கூட அதை செய்யவில்லை. ஆனால் தற்போது சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தும் முயற்சியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஈடுபட்டிருக்கிறார்
இந்நிலையில், ஒரு கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் ‘சாதிவாரிய கணக்கெடுக்கும் முயற்சியில் முதல்வர் ஜோசப் விஜய் இறங்கியிருப்பதாக எனக்கு செய்திகள் வந்தது.. அது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.. கடந்த திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க ஸ்டாலின் தயாராக இருந்தார்.
ஆனால் மும்மூர்த்திகள் எ.வ.வேலு, கே.என் நேரு, மற்றும் சேகர் பாபு ஆகிய மூன்று முன்னாள் அமைச்சர்கள்தான் ஸ்டாலினிடம் கொடுத்தால் பிரச்சனை வந்துவிடும்.. வேண்டாம் என சொல்லி தடுத்து விட்டார்கள். இறுதியாக பிரச்சனை வந்தது.. ஆனால் அது தேர்தலில்தான் எதிரொலித்தது.. அதனால்தான் இன்று எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருக்கிறது’ எனக் கூறியிருக்கிறார்..