1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Anbil Mahesh discuss for school re opening

பள்ளிகள் திறக்க செயல்பாட்டு வழிமுறைகள் – அன்பில் மகேஷ் ஆலோசனை!

Tamilnadu
செப்டம்பர் முதல் தேதியில் பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த ஆலோசனை நாளை நடைபெற உள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பரில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிகளை திறக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
பாஜகவுக்கு தாவுகிறாரா ராஜேந்திர பாலாஜி? – பாஜக அண்ணாமலை பதில்!