வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (13:35 IST)

பாஜகவுக்கு தாவுகிறாரா ராஜேந்திர பாலாஜி? – பாஜக அண்ணாமலை பதில்!

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறாரா என்பது குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில் இவர் மீது ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பாஜகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. வேறு கட்சியில் உள்ள பலரும் பாஜகவின் மீதான ஈர்ப்பால் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள், அரசியலில் ஒரே கட்சியில் இருந்தாக வேண்டிய நிர்பந்தம் கிடையாது. அவரவர் விரும்பும் கட்சியில் இணைய உரிமை உண்டு” என பேசியுள்ளார்.