1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. AMMK candidate Bhuvaneshwaran said he will won 1.5 crore votes difference

இருப்பதே 14 லட்சம் ஓட்டு, 1.5 கோடி வித்தியாசத்தில் ஜெயிப்பாராம்! அமமுக வேட்பாளரின் அட்ராசிட்டி

தூத்துகுடி
வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் தினகரன் கட்சியான அமமுகவுக்கு அடிமேல் அடிவிழுந்து வருகிறது. இரட்டை இலை சின்னம் இல்லை, குக்கர் சின்னம் இல்லை ஆகியவற்றோடு அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுச்சின்னமாவது கிடைக்குமா? அல்லது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சின்னமா? என்பதே இனிமேல் தான் தெரியும்
 
இந்த நிலையில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி சின்னம் என்றால் அனைத்து அமமுக வேட்பாளர்களுக்கும் டெபாசிட் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கும்
 
இந்த நிலையில் கனிமொழியும், தமிழிசையும் போட்டியிடும் தொகுதியான தூத்துகுடி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் புவனேஸ்வரன் இந்த தொகுதியில் கனிமொழியை ஒன்றரை கோடி வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என்று கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். பின்னர் அவர் அருகில் இருந்த ஒருவர் இந்த தொகுதியில் மொத்தமே 14 லட்சம் வாக்காளர்கள்தான் இருப்பதாக கூறியதும், 'மன்னிக்கவும், ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன்' என்று கூறி சமாளித்தார்.
 
தேர்தல் முடியும்முன் இன்னும் என்னென்ன கூத்துக்களை வாக்காளர்கள் பார்க்க வேண்டியது இருக்குமோ தெரியவில்லை
அடுத்த கட்டுரையில்
இப்படியும் ஒரு காரணமா? 30,000 உலக வரைபடங்களை அழித்த சீனா!