அமமுக நெல்லை வேட்பாளர் திடீர் மாற்றம்: பிரபல தயாரிப்பாளர் களமிறங்குகிறார்

dinakaran
Last Modified திங்கள், 25 மார்ச் 2019 (11:19 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் டிடிவி தினகரன் தனது கட்சியின் 39 வேட்பாளர்களை அறிவித்தார். இந்த நிலையில் இன்று திடீரென நெல்லை தொகுதி வேட்பாளரை மாற்றியுள்ளார்.
நெல்லை தொகுதிக்கு புதிய வேட்பாளராக பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 'நாடோடி', 'மிருதன்', 'ஈட்டி' உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர். விரைவில் வெளியாகவுள்ள 'கீ' படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்

மேலும் புதுவை மக்களவை தொகுதி வேட்பாளர் தமிழ்மாறன் என்றும் ஓசூர் சட்டமன்ற வேட்பாளர் புகழேந்தி என்றும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :