தினகரன் கட்சியில் இணைந்த டான்ஸ் மாஸ்டர்; உயிரை கொடுத்து வேலை செய்வதாக உறுதி!!!

Last Modified வெள்ளி, 22 மார்ச் 2019 (15:52 IST)
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியில் டான்ஸ் மாஸ்டர் கலா இணைந்துள்ளார்.
 
பாராளுமன்றம் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை முன்னிறுத்தியுள்ளது. அத்தோடு இன்று தினகரன் அமமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் விவசாயிகள் நலன், வேலைவாய்ப்பு, மாணவர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
kala
 
இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் கலா, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இன்று தன்னை இணைத்துக்கொண்டார். தினகரனை சந்தித்து தனது ஆதரவை அவர் தெரிவித்தார். தினகரனின் கொள்கைகள், அவரின் பேச்சு, மக்கள் மீது கொண்ட நலன் ஆகிய காரணங்களால் ஈர்க்கப்பட்டு அமமுகவில் இணைந்ததாகவும்,  கட்சி மேலிடம் என்ன வேலை கொடுத்தாலும் உயிரை கொடுத்து வேலை செய்வேன் என அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :