இப்படியும் ஒரு காரணமா? 30,000 உலக வரைபடங்களை அழித்த சீனா!

Last Updated: செவ்வாய், 26 மார்ச் 2019 (18:59 IST)
சீன சுங்க அதிகாரிகள் வேறு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த 30,000 உலக வரப்படங்களை கைப்பற்றி அழித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கான காரணம் விசித்திரமாக உள்ளது. 
 
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாநிலத்தில் அருணாச்சல பிரதேசமும் ஒன்று. ஆனால், சீனா அருணாச்சல பிரதேசம் அந்நாட்டை சேர்ந்தது என பல காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. 
 
அதேபோல், அருணாச்சல் மட்டுமின்றி சீனா தைவான் மீதும் உரிமை கோருகிறது. இந்நிலையில், 30,000 உலக வரைபடங்களில் சீனாவின் அங்கமான தைவான் தனி நாடாக குறிக்கப்பட்டிருக்கிறது என்றும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் அங்கமாக காட்டப்பட்டிருக்கிறது என்றும் கூறி அதை அழித்திருக்கிறது. 


இதில் மேலும் படிக்கவும் :