1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. amitsha put some conditon to eps on alliance

ஓபிஎஸ், டிடிவி எல்லாரும் என்.டி.ஏ கூட்டணிக்கு வரணும்!. அமித்ஷா போட்ட கண்டிஷன்!...

ops amit shah
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையை எல்லா கட்சிகளும் துவங்கிவிட்டது. திமுகவை பொறுத்தவரை அந்த கட்சி விடுதலை சிறுத்தை, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்.

அதிமுகவை பொறுத்தவரை ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டது. தற்போது பாமக அந்த கூட்டணியில் இணைந்திருக்கிறது. இன்று காலை சென்னையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வந்த அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி ‘இது ஒரு இயல்பான கூட்டணி.. அதிமுக கூட்டணியில் தற்போது பாமக இணைந்திருக்கிறது. இன்னும் சில கட்சிகளும் இணையும். பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை பின்னர் அறிவிப்போம்’ என கூறி இருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளெல்லாம் இணைய வேண்டும் அவர் சொல்லிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. அவரின் அறிவுறுத்தல்படியே தற்போது பாமகவை இணைத்திருக்கிறார்கள். மேலும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரையும் என்.டி.ஏ. கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என அமித்ஷா சொல்லி இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி இதை ஏற்பாரா என்பது தெரியவில்லை.

எனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுக கூட்டணியில் இணை வாய்ப்பில்லை என சிலர் சொல்கிறார்கள். சிலரோர் கடந்து சில தேர்தலில் டிடிவி தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்திருக்கிறார்.. எனவே அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
ஓபிஎஸ்-ஐ பொறுத்தவரை அவர் தவெக பக்கம் செல்ல திட்டமிட்டிருப்பட்தாக் தெரிகிறது. அதேநேரம் அவர் கேட்பது அங்கு கிடைக்கவில்லை எனில் என்.டி.ஏ கூட்டணிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் சிலர்.
அடுத்த கட்டுரையில்
இன்று ஒரே நாளில் ரூ.12,000 உயர்ந்தது வெள்ளி.. தங்கம் விலையும் உச்சம்..!